Гуру Песен Популярное
А Б В Г Д Е Ж З И К Л М Н О П Р С Т У Ф Х Ц Ч Ш Э Ю Я
# A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Hariharan - Thavamindri Kidaitha Varame | Текст песни

பெண்: தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே நான்

பெண் : நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்

ஆண் : நீ சூரியன் நான் வான்முகில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்

பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்

ஆண் : தவமின்றி கிடைத்த வரமே ஒ ...

பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஆண் : ஒ கடிவாளம் illaatha காற்றாக நாம் மாற
வேண்டாமா ? வேண்டாமா ?

பெண் : கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா ? வேண்டாமா ?

ஆண் : கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை
முடிவின்றி போகட்டும்

பெண் : பகலெல்லாம் இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன

ஆண் : நம் உயிர் ரெண்டும்
உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன

பெண் : தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஆண் : சூடான இடம் வேண்டும்
சுகமாகவும் வேண்டும்
தருவாயா ? தருவாயா ?

பெண் : கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா ? வருவாயா ?

ஆண் : விழுந்தாழும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில்
நினைவாக நான் எழுவேன்

பெண் : மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்

ஆண் : இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்

பெண் : தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே நான் வாழ்கிறேன்

பெண் : நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்

ஆண் : நீ சூரியன் நான் வான்முக்தில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்

பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்

ஆண் : தவமின்றி கிடைத்த வரமே

பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே

Hariharan еще тексты


Видео
Нет видео
-
Оценка текста
Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 3