Гуру Песен Популярное
А Б В Г Д Е Ж З И К Л М Н О П Р С Т У Ф Х Ц Ч Ш Э Ю Я
# A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

K. J. Yesudas, Manjula - Unnaithane | Текст песни

உன்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் நானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்

உன்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் நானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னை தானே ..

மலரின் கதவொன்று திறக்கின்றதோ
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதோ
உயிரே அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுத்தானே
இழழ் முத்து குளித்தானே
இரவுகள் இதம் ஆனதால்
கட்டி பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா

என்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு
என்னை தானே ...

உலகம் எனக்கென்றும் விளக்கானது
உறவே எனக்கு இன்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே
ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே

என்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு
என்னைத் தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே

K. J. Yesudas, Manjula еще тексты


Видео
  • Unnaiththaane Thanjam Endru உன்னைத்தானே ... Unnaiththaane Thanjam Endru உன்னைத்தானே ...
    ... Thaane Thanjam Endru" from the film 'Nallavanukku Nallavan' is another popular ...
Оценка текста
Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 1